Friday, 19 October 2012

Thirupampuram Ragu Kethu Temple

           அருள் மிகு வண்டுசேர் குழலீ உடனாய  அருள் மிகு                                               க்ஷோபுரிஈஸ்வரர் திருகோவில் 

                      தென் காளஹஸ்தி  ஸ்ரீ  ராகு , ஸ்ரீ கேது கோவில்

                                     திருபாம்புரம்

மகா சிவராத்திாி பெருவிழா அழைப்பிதழ் நாள் 24.02.2017

 









 கோவில் குருக்கள் மொபைல் நம்பர்  -கௌரிசங்கர்  - 097860 76969, 





 Temple Telephone Number  04352 - 469555,

 Temple timing   6.30am to -12.30 pm , 4 pm to 8 pm

 Sunday and Tuesday open at 2.45 pm to 8 Pm 

 Wednesday Ragu Kethu Temple open 6.30 am to 1.30 pm

Thursday Ragu kethu Temple open at 1.30 Pm to 3 pm 

  Temple Gurukal mobile Number
                            
                             Gowri sankar  - 097860 76969
                             Viswanathan -    097515 17745
                             Pream kumar  - 094430 47302
                             Veda prakesh -  09443943665




Auto Rental from Karkathi - Mob - 09486285329, 09629629692
ஆட்டோ வாடகைக்கு - மொபைல் நம்பர் -  09486285329, 09629629692

தல சிறப்புகள்


திருபாம்புரம் சோழநாட்டுச் சிவதலங்களுள் ஒன்றாகும், சிவாலயங்களுள் தேவார திருபதிகங்கள் பாடப்பெற்ற தலங்களே சிறப்புடையவனவாக போற்றப்படுகின்றன. தேவாரம் பாடபெற்ற தலங்கள் 274. அவைகளுள் 59வது திருத்தலமாக திருபாம்புரம்  போற்றப்படுகிறது.  

    இத்தலம் குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழ்ப்பெரும்பள்ளம் மற்றும் காளகஸ்தி ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற பஞ்சலிங்க தலம். எனவே இத்தலம் சர்வதோஷ பரிகாரா தலம் என புராணங்கள் கூறுகின்றன. ஈசனின் பஞ்ச முகங்களை குறிக்கும் வகையில் அமையப்பெற்ற பஞ்சலிங்க தலம்.

 

 

  திருபாம்புரம் கோயில் கம்பீரமான மூன்று நிலைகளை உடைய இராசகோபுரத்தை கொண்டுள்ளது.இராசகோபுரத்திற்கு எதிரே ஆதிஷ தீர்த்தம் உள்ளது. உள்ளே கொடி மரத்து விநாயகர் கொடி மரத்தின்கீழ் இரு:ந்தபடி கிழக்கு நோக்கிய வண்ணம் அருள் பாலிக்கிறார். கொடிமரத்தோடு பலிபீடமும் நந்தியெம்பெருமானும் காட்சி தருகின்றனர்.(கொடிமரம் காலப்போக்கில் அழிந்து விட்டது).   இரண்டு பிரகாரங்களை தன்னகத்தே அமையப்பெற்றுள்ளது. கோயிலின் தென்புற வளாகத்தில் திருமலை ஈசுவரர் எனப்படும் மாடக்கோயில் காட்சி தருகிறது.மலை ஈசுவரர் கோயிலில் படிகக்கட்டுகள் உள்ளன. இதில் ஏறி பாம்புரநாதர் கருவறை விமானத்தில் உள்ள சட்டைநதர் சன்னதிக்கு வரலாம்

.
    மேற்கு பிரகாரத்தின் கன்னிமூலையில் இராசராச விநாயகரும் இதையடுத்து வள்ளி தெய்வயானையுடன் கூடிய முருகரும் காட்சியளிக்கின்றனர். அம்மன் வண்டுசேர் குழலி கிழக்கு வாயிலை கொண்டுள்ளார்.  அம்மன் மாமலையாட்டி சதுர்புஜத்துடன் தாமரை, உருத்திராக்கா மாலை, அபய, வரத ஹ்ஸ்தங்களுடன் அருள்பாலிக்கிறார். அம்மை மாமலையாட்டியின் (வண்டுசேர் குழலி) சன்னதி இறைவனின் சன்னதிக்கு இடப்புறமாக வடக்கு பிரகாரத்தில் அமை:ந்துள்ளது. 

 
      கிழக்கில் பைரவர் , சூரியர் விஷ்ணு, பிரம்மன், பஞ்சலிங்கங்கள், ஆதிசேடன், இராகுகேது, நாயன்மார் நால்வர்,ஆகியோர் காட்சி தருகின்றனர். பாம்புசேரர் கோயில் கருவறை அர்த்தமண்டபம் மகாமண்டபம் முகமண்டபம் என அமை:ந்துள்ளது. மகாமண்டபத்தில் உற்சவதிருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. சோமஸ்கந்தர் நடராசர் வள்ளி தெய்வயானையுடன் முருகர் போன்றோர் வீற்றிக்கிரார்கள். இங்குள்ள திருமேனிகளுள் முருகப்பெருமானின் திருமேனி அற்புதமானது. முருகப்பெருமான் வச்சிரதையும் வேலையும் தாங்கி இடக்காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார்.   இறைவன் சன்னதி கருவறையில் பாம்புரேசுவரர் இலிங்க வடிவாய் எழுந்தருளியிருக்கிறார். ஆதிசேடன் (உற்சவர்) ஈசனை தொழுதவண்ணம் கருவறையில் எழு:ந்தருளியுள்ளார்.  இக்கருவறையை சுற்றிலும் அகழி உள்ளது. அகழியை மூடி மூன்று புறமும் மண்டபம் உள்ளது. சேடபுரீஸ்வரர் கோயில் கருவறை அதிட்டனத்தில் யாளிவரிசை காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தில் வடக்குக் கோஷ்டத்தில் புதிதாகத் துர்க்கை ஸ்தாபிக்கபட்டுள்ளாள். இராகுவும் கேதுவும் திருக்கோயிலின் ஈசானிய மூலையில் ஏகசரிரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளர்கள். 

  






சென்னையில் இருந்து திருபாம்புரம் செல்ல மயிலாடுதுறை சென்று அங்கு இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள கொல்லுமாங்குடி  சென்று  வலதுபுறம் திரும்பி கற்கத்தி சென்று  இடதுபுறம் திரும்பி  செல்ல திருபாம்புரம் அடையலாம்.

கோவில் தொலைபேசி என் -04352- 469555
                                கோவில் குருக்கள் மொபைல் நம்பர்  -
                              கௌரிசங்கர  - 097860 76969,
                              விஸ்வநாதன்  - 097515 17745
                              பிரேம்குமார்   -  094430 47302, 09655651712
                              வேத பிரகாஷ் -  09443943665

         கோவில் திறந்து இருக்கும் நேரம் 6.30 am to -12.30 pm , 4 pm to 8 pm
         ஞாயிறு மற்றும்  செவ்வாய்  மாலை  2.45 pm  to  8 pm 
         புதன்கிழமை  ராகு ,கேது  பூஜை பகல் 6.30 am to 1.30 pm
        வியாழகிழமை  ராகு ,கேது  பூஜை பகல் 1.30 pm  to 3pm 



                   கொல்லுமங்குடி 
                  Kollumangudi Road
Kollumangudi Road Junction, Take   Right Road to Karkathi
   Kollumangudi Road Junction, Take Right Road to Karkathi

               Railway line  crossing between kolumangudi to karkathi  Road


              கற்கத்தியில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலை
                  பாம்பு  வலைவு  கற்கத்தியில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலை











Thirupampuram is considered to be the 59th Tevara Stalams of Chola kingdom located south of the River Kaveri. The name of this village came from the temple name here. This temple is situated on the Kumbakonam to Karaikal highway, about 3 km from the main road. From Peralam it is 7 km. (It is off Peralam - Kollumangudi - Kumbakonam route) From chennai . Can access From Mayailaduthurai to Thiruvarur road
 
In google map  - http://goo.gl/maps/4y87b

திருப்பாம்புரம் செல்லும் வழிதடங்கள் கும்பகோணம் TOகாரைக்கால் செல்லும் வழி கற்கத்தி இருந்து 5KM This temple is also known as Urakapuram and Seshapuri. The name of the Lord Siva here is Paampuranathar (also referred as Seshapureeswarar), and Sarpeswararand the goddess is Vandaar Poonkuzhali (also referred to as Pramarambikai).
The King of Serpents Nagarajan, Karkotakan, Bhrama and Agasthyar are said to have worshipped Shiva here. The name Paampuram comes from the association with Nagarajan. It is said that 3 days a week snake is seen near the God or Goddess. This place is sung in the Thevaram hymns of Thirugnanasambandar. Thirunayana Samandhar has sung Devara hymns in praise of this lord. The temple history suggests that snakes are present at this temple and every Sunday, Tuesday and Friday odors of Jasmine and Thazampu are also present.
There is a fact that people do not die of snake bite at this place and no history of snake bites although a lot of snakes are seen in this area.
Once Lord Vinayagar was offering prayers to Lord Shiva. At that time the serpent in the neck of the Lord thought that he too is worshipped by Vinayagar. Knowing this Lord Shiva got angry and cursed the serpents to lose all their Shakthi. In order to retrieve it Aadiseshan and other serpents came to earth in one Maha Shiva Rathri and offered prayers to Kudanthai Nageshwarar in the morning, Thirunageshwaram at the noon, Thirupamburam Pambureswarar in the evening and Nagoor Nageshwarar at the night and got the blessings of the Lord.










26.05.2002 அன்று பௌர்ணமி ஞாயிறுக்கிழமை பாம்பு தனது தோலை திருமாலையாக அணீவித்து செனற காட்சி




          அருள் மிகு மூலவர் சன்னதியில்  பரிகரவிளக்கு 1, 2  ஏற்றவும்                                 
அருள் மிகு   மலைஈஸ்வரர் சன்னதி  பரிகரவிளக்கு 3 ஏற்றும்        இடம்                            
அருள் மிகு   குருபகவான் சன்னதி   பரிகரவிளக்கு 4 ஏற்றும்        இடம்                            
                              அருள் மிகு   ராஜகணபதிசன்னதி 


                            அருள் மிகு   சுப்ரமணீயர் சன்னதி
அருள் மிகு   வன்னிஈஸ்வரர் சன்னதி  பரிகரவிளக்கு 5 ஏற்றும்        இடம்                            



                  அருள் மிகு   அம்பாள் சன்னதி     பரிகரவிளக்கு 6  ஏற்றும் இடம்       

    அருள் மிகு   துர்கை   அம்பாள் சன்னதி  பரிகரவிளக்கு 7  ஏற்றும்        இடம்                            
                                    ஸ்ரீ  ராகு , ஸ்ரீ கேது , தனி சன்னதி

                                      ஸ்ரீ  ராகு , ஸ்ரீ கேது , தனி சன்னதி

                   ஸ்ரீ  ராகு , ஸ்ரீ கேதுவீற்க்கு    பரிகரவிளக்கு 8, 9 ஏற்றும் இடம்

                              ஸ்ரீ  ராகு , ஸ்ரீ கேது , தனி சன்னதி


ஸ்ரீ  ராகு , ஸ்ரீ கேது , தனி சன்னதி 



















View Larger Map